(க.விஜயரெத்தினம்)
நாட்டிலே தாண்டவமாடும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ;மக்களை பாதுகாத்தும் ,சுய தொழிலில் ஈடுபடுவதற்கான தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னெடுக்கும்.மட்டு அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவிப்பு.நாட்டிலே தாண்டவமாடும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ,வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நுண் கடன் தொல்லையில் மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து,மக்களை பாதுகாத்தும் ,சுய தொழிலில் ஈடுபடுவதற்கான தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னெடுத்து செல்லவுள்ளது எனத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று செவ்வாய்கிழமை(27) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், இலங்கை அரசியலில் கிங் மேக்கரும், இந்நாட்டில் உள்ள மூவின மக்களையும் ஒரேகுடையின்கீழ், ஒற்றுமையாக அரவணைத்து ஜனநாகரீதியான ஆட்சியை முன்னெடுத்துச் செல்லும் தலைவர் கௌரவ பஷில் ராஜபக்ஷ அவர்களின் பிறந்த ,மாபெரும் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இருதயபுரத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று (27.04.2021) காலை 8.30 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவின் வைத்திய அதிகாரி திருமதி.கீர்த்திக்கா மதனழகன் தலைமையிலான தாதி உத்தியோகஸ்தர்கள் குறித்த நிகழ்வுக்கு வருகைதந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு தட்டுப்பாடு நிலவும் குருதிக்கொடையை பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள்,மகளீர் அமைப்புக்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரால் தலைமை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் குருதிக்கொடையாளர்களுக்கு 500 பழமரக்கன்றுகள் அமைப்பாளரால் வழங்கப்படது.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தலைமையுரை ஆற்றுகையில் ...
நாட்டிலே தாண்டவமாடும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ,வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நுண் கடன் தொல்லையில் மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து,மக்களை பாதுகாத்தும் ,சுய தொழிலில் ஈடுபடுவதற்கான தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னெடுத்து செல்லவுள்ளது.இதனால் நாட்டை சுபீட்சம்மிக்க நாடாக மாற்றி அமைப்பதில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர்கள் துரித கவனமெடுத்து வருகின்றார்கள் எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours