வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியவலை பிரதேசத்தில் தனது நண்பர்களின் வீட்டுக்குச் சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலியான சம்பவம் நேற்று மாலை இடம் பெற்று;ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொக்கட்டிச்சோலை பத்தாம் வட்டாரத்தைச்சேர்ந்த (27) வயதுடைய சுந்தரலிங்கம் சுதன் என்பவர் புதுவருடதினத்தன்று தனது வீட்டிலிருந்து தனது நண்பர்களின் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது அவரின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours