(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வித்தியா சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வித்தியா சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை(16)காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாறு வெளியீட்டு வைக்கப்பட்ட சஞ்சிகையின் அறிமுக உரையினை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தமிழ்பாட ஆசிரியை கலாநிதி.சந்திரா தயாகாந்தனும்,ஏற்புரையை திருமதி.சு.டெ.றாகலும் உரையாற்றினார்கள்.மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தமிழ்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் இ.ஜோ.பிரபாகரனின் நன்றியுரையுடன் சஞ்சிகை வெளியீட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.









Post A Comment:
0 comments so far,add yours