காரைதீவு சகா

பாடசாலை அதிபர்  ஓய்வுபெற்றுச்சென்று மாதங்கடந்தபோதிலும் இன்னும் அதிபர் நியமிக்கப்படவில்லை எனவே பாடசாலை சீராக நடைபெற நிரந்தரஅதிபரை நியமித்துத்தாருங்கள் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் தலைமையில் எதிர்கால பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோதே மேற்படி கோரிக்கை பெற்றோரால் விடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலை அதிபர் இடமாற்றம் பெற்று சென்றமையால் சிரேஷ்டஆசிரியரே பதில் அதிபராக தொழிற்படுவதாகவும் ஆசிரியர் குறைவான காணப்படுவதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட  காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் தெரிவிக்கப்பட்டது .

இதன்போது அதிபர் நியமனம் பற்றியும் ஆசிரியர் நியமனம் பற்றியும் கலந்தாலோசிக்க பட்டதன் பிரகாரம் கூட்டத்திற்கு வருகை தந்த கோட்ட கல்வி பணிப்பாளர் இதற்கான துரித வேலை செய்துதருவதாக கூறினார்.

இது தொடர்பாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில்  வலய கல்வி பணிப்பாளரை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்ட போது இதற்கான வேலைகளை துரிதமாக செய்து தருவேன் என தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours