காரைதீவு  சகா


தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு பேரிழப்பாகும்..அவரது ஆத்மா சாந்தியடைவதாக என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழ மண்ணில் கொடும்போர் நடக்கும் காலங்களில் தேவாலயங்களை மக்களின் புகலிடமாக்கி பாதுகாத்தவரும் இலங்கை பேரினவாத அரசால் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்த தகவலை உலகிற்கு அளித்து இலங்கையின் நயவஞ்சகத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியவருமான பேராயரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாய் ஒலித்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக துயர் பகிர்ந்துள்ளார்.


'ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர்.மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours