(க.விஜயரெத்தினம்)


இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு அனுமதி வழங்கினால் நாடுபூராகவும் போராட நேரிடும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர்
அ.ஜேசுதாசன் தெரிவிப்பு.

அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டினால் இலங்கைக்குரித்தான கடல்பகுதியின்  கடல் தாவரங்கள்,மீன் வங்கிகள் அதிகமாக இருக்கும்  வடபகுதி கடல்பகுதி ,இவைகள் அனைத்தையும் முற்று முழுதாக மீன்வளம் அழித்து வருகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர் அ .ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் இன்று வியாழக்கிழமை(29)கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாங்கள் அராசாங்கத்திடம் சொல்லுகின்றோம் ஏற்கனவே இந்திய இழுவைப்படகுகள் வந்து எமது மீன்வளங்களை அழிப்பதனால் வட பகுதி மீனவர்கள் மட்டும் அல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை அரசு அனைத்து இந்திய மீனவர்களுக்கும் அனுமதியை வழங்கப் போகின்றோம் என்பது எமது இலங்கை மீனவர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக அழிக்கின்ற ஈனச் செயலாகும்.

ஆகவே இந்த அரசாங்கம் இதை கவனத்தில் எடுத்து  கொண்டு உடனடியாக அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் அனைத்து மீனவர்களும் கூட்டாக ஒன்றிணைந்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவோம் என்பதை அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours