(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)


கல்முனை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  வியாழக்கிழமை(29)வழங்கிய உத்தரவின் பிரகாரம்
நாளை (30)கல்முனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதான வழக்கினை கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவ்வாறானநிலையில் கல்முனை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  வியாழக்கிழமை(29)வழங்கிய உத்தரவின் பிரகாரம்
நாளை (30)கல்முனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இடம்பெறவுள்ளது.

இந்த வழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம்,இரா.சாணாக்கியன்,த.கலையரசன்.
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும்                                         இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணியின் துணைச் செயலாளர் அ.நிதான்சன்,தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் கா.கணேஸ் ஆகிய ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்க்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours