( -க.விஜயரெத்தினம்சா.நடனசபேசன்)
இந்தநாட்டில் 45 படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும்பிரபல சமூக சேவையாளரும் இலக்கியவாதியுமான தராக்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(29)காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு.ஊடக அமையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நினைவுதினத்தில் முதலில் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து 16ஈகைச்சுடரேற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு ,சிவராமிற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொவிட் 19 சுகாதார நடமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தி நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில்
நாட்டிலே வடகிழக்கில் யுத்தகாலத்தில் இரண்டு நிருவாக கட்டமைப்புக்கள் அப்போது தோற்றுவிக்கப்பட்டு ஆட்சியமைப்பு நடைபெற்றது.வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி,அரசாங்கத் தின் கட்டுப்பாட்டுபகுதி என இரண்டு பகுதிகள் காணப்பட்டது.இக்காலப்பகுதிகளிலி ல் தமிழர் தேசமெங்கும்,தமிழ்மக்களுக்கு எதிராகவும் பல்வேறு இன்னல்கள் இடம்பெற்றது.இவ்வாறான உண்மையான சம்பவங்களை துணிச்சலுடன், உண்மையாக எழுதி தமிழ்மக்களின் ஏகோபித்த பிரச்சனைகளை உலகறியச் செய்தவர்.இவர் தமிழ்மொழியில் மாத்திரமன்றி ஆங்கில மொழிகளில் பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு பத்திரிகைகளில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துப்புத்துலக்கி எழுதிவந்துள்ளார்.இவ்வாறு தமிழ்சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ச்சியாக எழுதி கிழக்கு மாகாணத்திலும்,வடகிழக்கில் புகழ்பூத்த ஊடகவியலாளராகவும் செயற்பட்டதுடன் மட்டக்களப்பில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு இருக்கின்றது.நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சரியாக 2005ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் கடத்தப்பட்டு மறுநாளான இன்றையதினம் 29 திகதி காலை படுகொலை செய்யப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிவராம் உட்பட இந்தநாட்டில் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இன்று சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16ஆவது ஆண்டில் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.இதுவரையும் இந்தநாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடஙவியலாளர்களுக்கு எதிரான விசாரணையோ அல்லது நீதியோ கிடைக்காமல் அஞ்சலி செலுத்துகின்றோம்.இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சனை நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்தவிடயமாகும்.இவ்வாறு உலகறியச்செய்த புகழ்பூத்த ஊடகவியலாளர் சிவராமின் இடத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகவியலாளரும் உருவாகவில்லை,உருவாக்கப்படவில் லை என்பது கவலையளிக்கின்றது.தற்போதும் சிவராமின் வெற்றிடம் ஊடகவியளர்களால் நிரப்படவில்லை எனத்தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours