(மண்டூர் மேலதிக நிருபர்)
வலிப்பு நோயாழி ஒருவர் ஆற்ரோரமாக நடந்து செல்லும் போது வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரினுள் விழுந்து நேற்று (31) மாலை மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்னர்.
சித்தாண்டி முருகன் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை வினாயகம் (59) என்பவரே சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்மித்த பகுதியில் தோட்டவேலைக்காக சென்று நேற்று (31) மதியவேளையில் தனது வீடு திரும்புவதற்காக ஆற்றோரமாக நடந்து வரும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டதனால் ஆற்றுநீரில் விழுந்து மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஏறாவூர் சுற்றுலா பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி


Post A Comment:
0 comments so far,add yours