(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு 



மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 19ஆந் திகதி தொடக்கம். 2021 மார்ச் 26 ஆந் திகதி வரையும் 71பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டக்களப்பு 20 நோயாளர்களும் வாழைச்சேனை 12 நோயாளர்களும் காத்தான்குடி12 நோயாளர்களும் ஏறாவூர்  07 பேரும் செங்கலடி 6 நோயாளர்களும் ஓட்டமாவடி சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில்  06 நோயாளர்களும் களுவாஞ்சிக்குடி பிரிவுகளில் 3 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று கோறளைப் பற்று மத்தி பிரிவில் 2 நோயாளர்களும், கிரான் 2 நோயாளர்களும், வவுனதீவு 1 நோயாளர்களும் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.
   
இருப்பினும் வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தாh.; மொத்தமாக கடந்தவாரம் 20 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்குநோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்றுவிழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours