வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கொரோனாச்சூழல் நிலவுகின்ற காரணத்தினால் சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்தே 2021 ஆண்டு எசலா விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஜூலை 24 அன்று நிறைவடைவது பற்றி முடிவெடுக்கப்படும் என ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை பாரம்பரிய கதிர்காம பாதயாத்திரை கடந்த வருடத்தை போல் இம்முறையும் கொரோனா ரத்துச்செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours