மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் உட்பட மொத்தமாக 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Post A Comment:
0 comments so far,add yours