போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 60 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துச்  செல்லும் நிலையில் சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் நேற்று போரதீவுப்பற்று சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட மண்டூர், திக்கோடை, பெரியபோரதீவு, பட்டாபுரம் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.குறித்த பகுதிகளில் சுமார் 60பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 16 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

போரதீவுப்பற்று சுகாதார பிரிவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும், பயணத்தடையினை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours