உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் உருமாறிய கோவிட் - 19 வைரஸின் திரிபுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எந்த உருமாறிய வைரஸ் திரிபுகள் பரவினாலும் அவற்றின் தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசங்களை சரியாக அணிய வேண்டும் என்பதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கிருமி தொற்று நீக்கியை பயன்படுத்துவது உட்பட சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
அத்துடன் ஒரு மாத காலத்திற்கேனும் அவசியமற்ற பயணங்கள் செல்வதை தவிர்த்து வீடுகளில் தங்கியிருந்தால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜீவந்திர குறிப்பிட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours