(அஸ்லம் எஸ்.மௌலானா)


கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்களுக்குரிய நோன்புப் பெருநாள் முற்பணம் நாளை திங்கட்கிழமை வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுமென மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் எம்.ஏ.ரபீக் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாகாண கல்வி திணைக்கள நிருவாக நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் திறைசேரி மூலம் பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமுமே இவர்களுக்கு பெருநாள் முற்பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் தானும் மேற்கொண்ட முயற்சி காரணமாக மாகாண திறைசேரியிடமிருந்து இதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பெருநாள் முற்பணத்தினை 10ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சகல வலயக் கல்வி அலுவலக கணக்காளர்களும் கேட்கப்பட்டிருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இதுவரை நோன்பு பெருநாள் முற்பணம் வழங்காமை குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours