கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியொருவர் உட்பட 4 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸாருடன் இணைந்து சாய்ந்தமரு வேப்பையடி வீதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்த போது அங்கு போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை இஸ்லாபாத்தைச் சேர்ந்த ஒருவரை 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவரை 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும்., மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1490 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours