(க.விஜயரெத்தினம்)

பொதுமக்கள் அநாவசியமான முறையில் பொது இடங்களில் நடமாடுதல்,ஒன்றுகூடுதல் முற்றாக தடை போன்ற 
கொவிட்  தடுப்பு வழிகாட்டல்கள் கொவிட் செயலணியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொவிட் 19  தொற்றின்
மூன்றாது அலையிலிருந்து மக்களை பாதுகாத்து,கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகள் நாடு பூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில்  மண்முனை தென் எருவில் பற்று  களுவாஞ்சிகுடி பிரதேச  செயலக  கொவிட் 19 தடுப்புச் செயலணியின்  கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெததி்னம் தலைமையில் திங்கட்கிழமை(03.05.2021)பிற்பகல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்,பொது சுகாதார பரிசோதகர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி  பொதுச்சந்தையை முதற்கட்டமாக 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்தல்,விளையாட்டுப் போட்டிகள்,மாநாடுகள்,  கூட்டங்கள் போன்றன நடாத்துவதற்கு  முற்றாக தடைவிதித்தல்,வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது தடை செய்தல்,பொதுமக்கள் அநாவசியமான முறையில் பொது இடங்களில் நடமாடுதல்,ஒன்றுகூடுதல் முற்றாக தடை போன்ற
கொவிட்  தடுப்பு வழிகாட்டல்கள் கொவி செயலணியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதன்போது மக்கள் அசமந்த போக்கில் நடந்து கொள்வது தொடர்பில் சுகாதார துறையினர் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளால் அதிருப்தி
இதன்போது வெளியிடப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours