த.தவக்குமார்


 பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர், நேற்று (11) இனங்காணப்பட்டுள்ளனர் என கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, முனைக்காடு, முதலக்குடா, மகிழடித்தீவு மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள், வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் பெண் தனியார் வைத்தியசாலையில் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours