(விஜயரெத்தினம்)

துறைநீலாவணை கிராமத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் சில பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள்,பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
துறைநீலாவணை கிராமத்தில் உள்ள தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்கு,துறைநீலாவணையில் பொருத்தப்பட்ட இன்னும் சில தெருவிளக்குகள்,கடந்த மூன்று மாதமாக பழுதடைந்துள்ளது.இதன்காரணமாக தற்போது அவ்விடம் இருள் சூழ்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள்,மாணவர்கள் இரவில் அச்சத்துடன் போக்குவரத்து செய்வதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்.

களுதாவளை பிரதேச சபையினால் பரிபாலனம் செய்யப்படும் குறித்த தெருவிளக்குகள் பழுதடைவது பற்றியும்,சேதமடைவது பற்றியும் களுதாவளை பிரதேச சபையின் வேலைத்தள மேற்பார்வை குழுவினர் இதனை கண்டும் காணாமலும் இருப்பதை துறைநீலாவணை பொதுமக்கள் கவலை அடைகின்றார்கள்.

இதேவேளை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் துறைநீலாவணை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட துறைநீலாவணைக் கிராமத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் இவ்விடயமாக கவனம் செலுத்தாமல் மௌனம் காப்பது ஏனென்று ? துறைநீலாவணை இளைஞர்கள்,பொதுமக்கள் கேள்வி கேட்டு அங்கலாய்க்கின்றார்கள்.

இதேவேளை களுதாவளை பிரதேச சபைக்குட்பட்ட நூலகங்களின் வளாகங்களிலும்,நூலக கட்டிடங்களின் கூரைகளிலும் குப்பைகள் காணப்பட்டு நூலகம் துப்பரவு அற்று காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,களுதாவளை பிரதேச சபை தவிசாளர்,மற்றும் செயலாளர் குறித்த பிரச்சனையை பார்வையிட்டு
தெருவிளக்கை மீண்டும் ஒளிரச் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours