(வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் கொரோனா காரணமாக இதுவரை 6710 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவிற்கு 90பேர் பலியாகியுள்ளனர். கடந்த இருஅலைகளைவிட இந்த மூன்றாவது அலையில் மரணவிகிதம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.

இரண்டாம்அலையின்போது மொத்தமாக 26 என என்றிருந்த மரணத்தொகை மூன்றாவது அலையின்போது இரண்டுமடங்கையும் தாண்டி தற்போது 64ஆகி அதிகரித்துள்ளது. அதன்படி மொத்த பலியுயிர் தொகை 90 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கில் மூன்றாவது அலையில் இதுவரை 2845 பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 1292 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 871 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 588 பேரும்     கல்முனைப்பிராந்தியத்தில்  94 பேரும்  தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்தையும் தாண்டி 1292பேர் கொரோனாத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதன்படி கிழக்கில் திருமலை மாவட்டம் ஆபத்தான நிலையிலிருப்பதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.முதலிருஅலைகளின்போது ஆக 864ஆகஇருந்த இவ் எண்ணிக்கை தற்போது மூன்றாவது அலையுடன் மொத்தமாக 2278ஆக எகிறியுள்ளது.

கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.


கிழக்கு மாகாணத்தில் மூன்று அலைகளிலும் மொத்தமாக இதுவரை 6710பேர் தொற்றுக்கிலக்காகிய அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 2278பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளான 6710பேரில் இதுவரை 5765பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். அதேவேளை 90பேர் மரணிக்க 855பேர் தொற்றிலுள்ளனர்.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23பேரும் இரண்டாவது அலையில் 3842பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்றாவது அலையில் இதுவரை 2845பேர் இலக்காகியுள்ளனர்.

90பேர் மரணம்!
கிழக்கில் இதுவரை 90பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 46பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 10 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 பேரும்     கல்முனைப்பிராந்தியத்தில்  13 பேரும்  மரணித்துள்ளனர்.
கிழக்கில் முதலிரு அலைகளில் 26பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 64பேர் பலியாகியுள்ளனர் என்னது இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.

கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சைநிலையங்களில் தற்போது 750பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours