த.தவக்குமார்
மட்டக்களப்புப் பகுதியில் நேற்று மரணமடைந்த பெண்ணின் சடலத்தினை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொவிட் தொற்று இருப்பதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு பூம்புகார் வீதியில் வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்த 83 வயதுடைய பெண் திடீரென திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பரிசோதிக்கப்பட்ட போது கொவிட் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .அப்பிரதேசம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாகக அறிவிக்கப்பட்டுள்ளது. மரணமான பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் பரிசோதித்தபோதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது தற்போது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரனாவிதிகளுக்கு அமைய அடக்கம் செய்ய இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Post A Comment:
0 comments so far,add yours