தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானசெய்தி எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என த.தே.கூட்மைப்பின் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு உதவி புரிந்தது தமிழ்தேசிய பாதையிலே விமர்சனத்துக்கு அஞ்சாது மிரட்டலுக்கு அடிபணியாத சாதாரண மானவர்களைப் போன்று பழகுகின்ற ஐயா அவர்களுடைய இழப்பு தமிழ் தேசியத்தின் பேரிழப்பு.
அமைதியான அடக்கமான ஒரு பண்புமிக்க நல்ல மனிதர். தன்னை தூற்றியவரை கூட தூர வைக்காத மனிதன்இ தமிழ் தேசிய பற்றாளன். தேசிய பட்டியல் மூலம் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் ஆசான்...
எம்மை போன்ற வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு எப்போதும் துணையாக நின்றவர்.. நாம் எங்கு அழைத்தாலும் தொடர்பு கொண்டாலும் வருகின்றேன் என்று மட்டுமே பதில் தருவார்...
இந்த ஒரு சூழ்நிலையில் அவரின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான்.

Post A Comment:
0 comments so far,add yours