குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (18) பாராளுமன்ற குழு அறை 02 இல் இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனை குழுவில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நிலையான கட்டளை 112 இன் விதிகளின்படி குழுவிற்கு அறிவிக்கப்படும் விடயங்கள் குறித்து விவாதிக்கும் போதே கௌரவ பிரதமர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்.

இதன்போது, காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டமூலத்தின் திருத்த சட்டமூலம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா அவர்களினால் ஆலோசனை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

காலி மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களின் தோட்டங்களை அண்மித்து காணப்படும் குடிசை வீடுகள் தொடர்பில் வெளிப்படுத்தி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அப்பகுதிகளுக்கு வீட்டுத் திட்டங்களை திட்டமிடுமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஆலோசனை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமனாத் சி தொலவத்த, பிரமித பண்டார தென்னகோன், கோகிலா குணவர்தன மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.ஹர்ஷான் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours