(காரைதீவு   சகா)


பாராளுமன்றஉறுப்பினர் ஹரீஸ் வரலாற்றை மறந்து பேசுகிறார்.1980 1989 1990 1993களில் அம்பாறை மாவட்டத்தமிழ் மக்களுக்கு யாரால் என்ன நடந்தது என்பதையிட்டுக்கூறினால் மேலும் குரோதம் வளரலாமென்பதை கருத்திற்கொண்டு தவிர்க்கிறேன்.

என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:

அம்பாறை மாவட்ட தமிழர்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டும் தமிழ்க்கிராமங்கள் ஆலயங்கள் சூறையாடப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. 

வீரமுனைப்படுகொலை திராய்கேணிப்படுகொலை உடும்பன்குளப்படுகொலை போன்ற படுகொலைகள் தமிழ்க்கிராமங்களுக்கு நடந்த காட்டுத்தர்பார் என்பவற்றையெல்லாம் யார் யார் செய்தார்கள் யார் யார் பின்னணியில் இருந்தார்கள் என்பதை உலகறியும். 
முஸ்லிம் ஊர்காவல்படையினர் என்ன செய்தார்கள்? என்பதையும் அறிவோம். ஆலயத்தில் தஞ்சமடைந்த அப்பாவி தமிழ்மக்களை வெட்டியும் சுட்டும் கொன்றுகுவித்த கொலைகாரர்கள் யார் என்பதை உலகறியும். .இந்த வரலாறுகளை எளிதில் மறந்துவிடமுடியாது.

இவ்வாறு ஊழிக்காலம் கண்டு சொல்லொணா இழப்புகளைச்சந்தித்த தமிழினத்தை விடுத்து யாருக்கோ 1989இல் அநீதி இழைக்கப்பட்டதாகக்கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது. எனினும் அதை எதிர்காலசந்ததிக்கு வழங்கி குரோதத்தை ஏற்படுத்தக்கூடாதென்பதற்காக மௌனம் சாதித்துவருகிறோம்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours