த.தவக்குமார்


ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி கிரான்குளத்தைச் சேர்ந்த 67 வயதுடைய கதிரேசபிள்ளை பன்சாட்சரம் என்பவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி சுகயீனம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி; ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நிலையில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்;டது. பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பிரேத்தை அங்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பிர்சோதனையிலும் தொற்று உறுத்திப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் பிரேதத்தை கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் பிரதேங்களை அடக்கம் செய்யும் விதிகளுக்கு அமைவாக அடக்கம் செய்யுமாறு வேண்டியுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours