இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான ஒற்றை எண்கள் கொண்டவர்கள் மாத்திரமே வெளியில் செல்ல இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் வீதிகளில் நடமாடியதை தொடர்ந்து பொலிஸாரினால் தேசிய அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது இரட்டை எண்கள் கொண்டவர்கள், எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் அநாவசியமாக வெளியில் நடமாடுவதனை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours