தற்போதைய சூழ்நிலையில், அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சில பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அத்தியாவசிய சேவையுடன் தொடர்புபடாத பயணிகள் இந்த பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைத்தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளதாவது,
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களில் வழமையான பயணிகள் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும்.
இருப்பினும் இன்று தொடக்கம் இம் மாதம் இறுதி வரையில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதினால் மாகாணங்களுக்கிடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது.
அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் இன்று தொடக்கம் சில பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அத்தியாவசிய சேவையுடன் தொடர்புபடாத பயணிகள் இந்த பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours