(க.விஜயரெத்தினம்)
இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரத்தியேக இணைப்பு செயலாளரின் கார் விபத்து.மூவர் படுகாயம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கொம்மாதுறை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை(11)இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
குறித்த காரினை செலுத்திச் சென்றவர் வாகனம் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயற்சிக்கும் போதே அதிவேகம் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரத்தியேக இணைப்பு செயலாளர் என விபத்தை பார்த்த அப்பிரதேச மக்கள் தகவல்களை தெரிவித்தனர்.இவ்வாறு விபத்துக்குள்ளான காரின் சாரதி சம்பவம் இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு விபத்தில் சேதமடைந்த கார், மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளதுடன் விபத்தில் சிக்குண்ட வாகனங்கள் போக்குவரத்து பொலிசாரினால் மீட்கப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Post A Comment:
0 comments so far,add yours