ஜோர்தான் நாட்டின் ஸம்-ஸம் சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் மாவடிப்பள்ளி ஜும்மாபள்ளிவாசலுக்கு நீர்தாங்கியும் இலவச நீர்வழங்கலும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் குடிநீர் தேவையை போக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் இவ் அமைப்பினால் கடந்த பல மாதங்களாக நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபா செலவில் மாவடிப்பள்ளி ஜும்மாபள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைஸுல் ஹக்கீம் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளித்தார். இந்நிகழ்வில் பள்ளிவாசல் முக்கிய நிர்வாகிகள், மஹல்லா வாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours