(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
செங்கலடி மத்திய கல்லூரியில் 34பேர் பல்கலைக்கழக தகுதி.தொழிநுட்ப பிரிவில் இக்கல்லூரி மாணவன் மாவட்டத்தில் முதலிடம்.
செங்கலடி மத்திய கல்லூரியில் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து 36பேர் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளதாக செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் குமாரசாமி அருணாச்சலம் இன்று புதன்கிழமை(5) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
எமது செங்கலடி மத்திய கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப்பரீட்சையில்(2020) பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் கே.பவிசேக் எனும் மாணவன் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டார்.மேலும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 12பேரும்,வர்த்தகதுறையில் 3பேரும்,கணிதப்பிரிவில் கோணேஸ்வரன் சதீஸ் 3A சித்திகளையும்(மாவட்டநிலை 18),சசிக்குமார் டனேஸ் 2A,B(மாவட்டநிலை 32)ஆகிய இருவரும் பொறியியல்துறைக்கும்,கலைத்துறையில் 12பேரும்,விஞ்ஞானத்துறைக்கு 6பேருமாக 36பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு தமது பாடசாலைக்கும்,பாடசாலைச் சமூகத்திற்கும்,மற்றும் தனது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள்,மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours