கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
”கர்ப்பிணி மற்றும் உங்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மற்றும் சரியான சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெறுவது அவசியம்.” என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கர்ப்பிணித் தாய் அவசர தேவையைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஏனெனில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு அல்லது சிகிச்சையகத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், கொரோனா தொற்றை தவிர்க்க பின்வரும் குறிப்புகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1. காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இருப்பதை குறைத்தல்
2. எப்போதும் முகக்கவசத்தை சரியாக அணிதல்
3. நபர்களுடான இடைவெளியை சரியாக பின்பற்றல்.
4. இறுதிச் சடங்குகள் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்
5. சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவுதல்.

Post A Comment:
0 comments so far,add yours