(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
இவ் ஜந்தாயிரம் ரூபா கொடுப்பனவானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் சமூர்த்தி வங்கி கிளையின் ஊடாக திருக்கோவில் சமூர்த்திப் பயனாளி குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் கொடுப்பனவுகள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் விநாயகபுரம் சமூர்த்தி வங்கி பிரிவின் கீழ் உள்ள சுமார் 3600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இவ் கொடுப்பனவுகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டப் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கள விஜயத்தின் ஊடாக வழங்கி வைத்திருந்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours