காரைதீவு   சகா

 காரைதீவு சுகாதாரப்பரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளிக்கிராமத்தில்  நேற்று மேற்கொண்ட 97 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் இரண்டு நபர்கள் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன்  ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் அங்கு ஒரேதடவையில் 14பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டநிலையில் இந்த சோதனை மீண்டும் அங்கு மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்சா.வேல்முருகு  பொது சுகாதார பரிசோதகர்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்நுளம்பு கள தடுப்பு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு படையினர்  இணைந்து மேற்கொள்ளப்பட்ட 97  பேருக்கான அண்டிஜென் பரிசோதனை இரண்டு நபருக்கு கொவிட்_19  தொற்று உறுதி செய்யப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours