எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியமானது (எஸ்டா ) இன்று தனது 3வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது .எருவில் கிராமத்தை மையப்படுத்திய இத் தொண்டு நிறுவனமானது 03/06/2018 அன்று முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரியும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய திரு சா .பேரின்பநாயகம் அவர்களது தலைமையில் உருவாக்கப்பட்டது .எருவில் கிராமத்திற்கும் ஏனைய கிராமங்களுக்கும் எருவில் சார்ந்து பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது .எஸ்டா அமைப்பின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் "சமூகசேவகர் " அ .வசீகரன் விளங்குவதுடன் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஐவரையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றது .இத் தொண்டு நிறுவனமானது தொடங்கப்பட்ட காலந்தொடக்கம் இன்றுவரை கல்வி ,சமய ,கலாசார ,விளையாட்டு ,வாழ்வாதார உதவிகள் என்ற அடிப்படையில் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான பணிகளை செய்துள்ளது .பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டி பணப்பரிசில்களை வழங்குதல் , கஷ்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் அடங்கிய பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல் , சிறுவர் தின விளையாட்டு நிகழ்வுகளுக்கு உதவுதல் , விளையாட்டுக்கழகங்கள் மற்றும் கலைக்கழகங்கள் என்பவற்றின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு உதவுதல் , இடர்காலங்களின் போது (covid 19/ வெள்ளம் ) இடர்படும் குடும்பங்களின் துயர் போக்க உலருணவு பொதிகளை வழங்குதல் ,முன்பள்ளி பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குதல் , பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்குதல் ,பிரத்தியேக வகுப்புகளுக்கான நிதி உதவி வழங்குதல் ,கல்வி கருத்தரங்குகளை நடாத்துதல் ,நூலக அபிவிருத்திக்கான புத்தகங்களை வழங்குதல் மற்றும் பழைய புத்தகங்களை சேகரித்து வழங்குதல் , ஆலயங்களின் அறம் சார்ந்த வளர்ச்சிக்கு உதவுதல் ,என்ற அடிப்படையில் எருவில் கிராமத்தில் தனது பணிகளை கடந்த வருடங்களில் எஸ்டா அமைப்பு முன்னெடுத்தது .இந்த ஆண்டு (2021) அதே உத்வேகத்துடன் கல்வி அதிக பங்களிப்புகளை வழங்குவதுடன் ஏனைய பணிகளையும் முன்னெடுத்தது .எருவில் கிராமத்தில் மாத்திரமின்றி உதவிகள் தேவைப்பட்ட ஏனைய பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வரிசையில் மட் /பட் /ஸ்ரீ வெள்ளிமலை பிள்ளையார் அ .த .க பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாண வர்களுக்குமான அப்பியாச கொப்பிகள் அடங்கிய கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .இவை தவிர மட் /பட் /ஆனைக்கட்டியவெளி நாமகள் வித்தியாலயம் , மட் /பட் /சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயம் , மட் /பட் /காந்திபுரம் கலைமகள் வித்தியாலயம் , மட் /பட் / களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் , மட் /பட் /கோடைமேடு நவசக்தி வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் சார்பாக இம்முறை (2021) தரம் 05 பரிசில் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கான மேலதிக பயிற்சிபுத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கோடைமேடு நவசக்திவித்தியாலயத்தின் சார்பாக புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் ரூபா ஐம்பதாயிரம் ( 50000/=) நிதி அனுசரணையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .மேலும் எம் பிரதேச தேசிய பாடசாலையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் நோக்கில் confrence table ஐம்பதாயிரம் ரூபா செலவில் எஸ்டா அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது . மேலும் எஸ்டா அமைப்பின் நிதி பங்களிப்பில் கா .பொ .த (சா /த ) பரீட் சை எழுத்தவுள்ள மாணவர் (மாங்காடு ) ஒருவருக்கு பரீட்சை எழுதும் வரைக்குமான பிரத்தியேக வகுப்புக்கான செலவுகள் மாதந்தோறும் (2000/=) வழங்கப்படுவதுடன் உயர்தர பிரிவில் கல்வி பயிலும் மாணவிக்கு (மட் டக்களப்பு ) மாதந்தோறும் ( 5400/=)வழங்கப்பட்டு வருகின்றது .எனவே எஸ்டா அமைப்பு பிறந்தநாள் காணும் இந்த வேளையில் அமைப்பின் ஸ்தாபகர் அ .வசீகரன் அவர்களின் நிதி அனுசரணையில் பல பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அமைப்பின் சிறப்பான பணிகள் காரணமாக பல உள்ளூர் வெளியூர் அன்பர்களும் தாமாகவே முன்வந்து அமைப்பின் சேவைகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளனர் .அந்த வகையில் திரு பொ .புஷ்பநாதன் (ஆசிரியர் ), திரு பே .தர்மராஜ் ,திரு பே .விஜயகுமார் , திரு ச .பற்மநாதன் (களுதாவளை ) , திரு R.S சிவகுமார் (களுத்துறை ) திரு இ .ஜெயபாலசிங்கம் , திரு இ. கிருஷ்ணபிள்ளைஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் . அத்துடன் அமைப்பின் சேவைகளுக்கு திறன்பட ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கும் ஆலோசர்கள் உறுப்பினகளுக்கு நன்றி ஊடகத்துறை அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
சேவையின் சிகரமாக 3 ஆண்டைக்கடந்தது எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம்
Subscribe to:
Post Comments (Atom)








Post A Comment:
0 comments so far,add yours