ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் எதிர்வரும் வியாழக்கிழமையன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது ஐக்கியக்கட்சி மக்களின் நேரடி வாக்குகளால் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

எனினும் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது.

எனினும் உட்கட்சி முரண்பாடு காரணமாக இதுவரைக்காலமும் இந்த ஆசனம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours