(திருக்கோவில் எஸ்.கார்த்திகேசு)
அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் தம்பிலுவில் பாலக்குடா காயத்திரிகிராமம் ஆகிய கிராமங்களில் பயணத்தடைக் காரணமாக தினக்கூலி பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி வீடு வீடாகச் சென்று உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கான அய்ஷா அறக்கட்டளையின் ஊடாக காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறில் இன்று 250 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
அந்தவகையில் பயணத்தடை காரணமாக தினக்கூலி பாதிக்கப்பட்டு மிக வறுமை நிலையில் வாழும் தெரிவு செய்யப்பட்டு குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளரின் முயற்சியினால் இரண்டாம் கட்டமாக 250 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிறில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பொருட்களை கையளித்து இருந்தனர்.


Post A Comment:
0 comments so far,add yours