த.தவக்குமார்
மட்டக்களப்பில் ஐஸ்போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இளைஞன் போதைபபொருட்களை உண்டமையினால் உயிரிழந்துள்ளதாக பிரேதபரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் பிரதபரிசோதனையானது இன்று சிரேஷ்ர சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோபன் தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி குறித்த இளைஞர் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றினை உண்டமையினால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞன் பொலிஸ்நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மயக்கமடைந்த போது வைத்திசாலைக்குக் கொண்டுசென்ற நிலையில் மரணமடைந்திருந்தார். இதன் பின்னரே பிரேத பரிசோதனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்றபோதே ஐஸ் போதைப்பொளை உண்டமையாலே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
Post A Comment:
0 comments so far,add yours