(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் 2600 சமூர்த்தி குடும்பங்களுக்கு நான்காம் கட்ட ஜந்தாயிரம் பணம் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 மூன்றாம் அலை அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சமூர்த்திப் பெறும் வறிய மக்களுக்கு அரசினால் நான்காம் கட்ட 5ஆயிரம் ரூபா பணம் தம்பிலுவிலில் 2600 சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவ் ஜந்தாயிரம் ரூபா கொடுப்பனவானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் ஊடாக தம்பிலுவில் கிராம 2600 சமூர்த்திப் பயனாளி குடும்பங்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் கொடுப்பனவுகள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் தம்பிலுவில் சமூர்த்தி வங்கி பிரிவின் கீழ் உள்ள சுமார் 2600 சமூர்த்திக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவ் கொடுப்பனவுகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டப் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் தம்பிலுவில் வங்கி முகாமையாளர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கள விஜயத்தின் ஊடாக  வழங்கி வைத்திருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours