(எம்.ஏ.றமீஸ்)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பயணத்தடை பிறப்பிக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது தமது வாழ்வாதாரத்தினை இழந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசித்து வரும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு இன்று(03) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இயங்கி வரும் சமூரத்தி வங்கியின் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.சாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி, தீகவாபி, ஆலம்குளம், சம்புநகர் போன்ற பகுதிகளில் சமுர்த்தி உதவி பெறும் 5194 பயனாளிகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. இக்கொடுப்பனவுத் தொகை சமுர்த்தி வங்கி மூலம் உரிய சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற இந்நிகழ்வின்போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.எம்.நசீல், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லாஹ், நிருவாக கிராம சேவை அதிகாரி ஏ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours