பொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலனியின் சுற்றறிக்கைக்கு அமைவாக கொவிட்-19 நான்காம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேசத்தில் நடைபெற்றது.
51கிராமசேவையாளர் பிரிவுகளைக்கொண்ட இப்பாரிய பிரிவில் முதற்கட்டமாக 9358சமுர்த்திக்குடும்பங்களுக் கு 5000ருபா கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடு வீடாகச் சென்று வழங்கி வைக்கும் நிகழ்வினை மட்டக்களப்பு தரவை -02, மற்றும் வீரமுனை-01 ஆகிய பிரிவுகளில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் நேரடியாகச்சென்று ஆரம்பித்தவைத்தார்.
அச்சமயம் உதவி பிரதேச செயலாளர் யு .எம் அஸ்லம் சமுர்த்தி மாவட்ட செயலக கணக்காளர் ஐ. எம் பாரிஸ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ எல் எம் சலீம் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு இக்கொடுப்பனவு வழங்கிவைக்கப்படுமென்று கூறப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours