(க.விஜயரெத்தினம்)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்றுக்காரணமாகவும்,பயணத்தடை காரணமாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும்,தமிழ் பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி குழு பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமாரின் சொந்த நிதிப்பங்களிப்பில்,அவரது ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின்மூலம்  ஞாயிற்றுக்கிழமை(27) திருப்பழுகாமம்,கோயிற்போரதீவு,களுதாவளை போன்ற கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மகளீர் அணி தலைவி திருமதி ச.காந்தரூபி அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்டு,தொழில் இழந்த மக்களுக்கும்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நேசக்கரம் நீட்டி சுமார் 700 குடும்பங்களுக்கு இன்றையதினம் நிவாரப்பொதிகள் வழங்கப்பட்டது.இதுவரையும் 2400 குடும்பங்களுக்கு உலர் உணைவுப்பொதிகள்  வழங்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000 உலர் உணவுப்பொதிகள் வரையும் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours