(வி.ரி.சகாதேவராஜா)

சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த அம்பாறை -மட்டக்களப்புமாவட்ட எல்லைக்கிராமமான  துறைநீலாவணை மற்றும் பெரியநீலாவணை  மக்களுக்கு  ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று  வழங்கப்பட்டது.

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப்போக்க 'கனடா டொராண்டோ சீலன் றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம்'  இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.

இந்த  உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  உலருணவுப் பொதிகளை நேற்று   வழங்கிவைத்தார்.
   மட்டக்களனப்பு தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் செயலாளர் க.சஜீந்திரன்  ஒழுங்கமைப்பின் கீழ் அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.

பயனாளிகள் கருத்துரைக்கையில் 'கனடா டொராண்டோ சீலன் றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்திற்கு' நன்றி தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று  கூறினர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours