சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் அன்புத் தாயார் சல்மா மஜீத் அவர்கள் சம்மாந்துறையில் இன்று காலமானார்.
இவர் நிந்தவூர் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஸ்வீட் மஜீத் அவர்களின் பாரியாரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்மாந்துறை மண் என்றும் மறக்க முடியாத தனிப்பெரும் தலைவருமான மர்ஹூம் எம் ஏ.அப்துல் மஜீத் (பீ.ஏ) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை முஹல்லா மஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post A Comment:
0 comments so far,add yours