அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வீதிகளில் அலட்சியமாக நடந்து செல்பவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து மக்களுக்கு கோவிட் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வுகள் குறித்து வீதி வீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீணாக வீதிகளில் நடமாடுகின்ற நபர்களுக்கு பி.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப் .எம் .ஏ. ஜனாப் காதர்  தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours