(க.விஜயரெத்தினம்)
சாரதியின் கவனக்குறைவால் துறைநீலாவணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் துறைநீலாவணை கிராமத்திற்கான தெருவிளக்கு மின்சார இணைப்பு துண்டிப்பு.களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை (1)நண்பகல் 12.00 மணியளவில் துறைநீலாவணை சீர்பாததேவி சிலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் துறைநீலாவணை கிராமத்திற்கான தெருவிளக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான,ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தினற்கான கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன் வயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளது.
துறைநீலாவணை கிராமத்திற்கான பிரதான வீதி தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீதிக்கான கற்கள்,கிரவல்கள் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் சேமிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு கனரக வாகனத்தின் மூலம் குறித்த விளையாட்டு மைதானத்தில் இன்றையதினம் கிரவல்கள் கனரக வாகனத்தினால் பறிக்கப்பட்டன.பறிக்கப்பட்ட நிலையில் கனரக வாகனத்தின் சாரதியின் கவனக்குறைவால் கனரக வாகனத்தை வீதியால் எடுக்கும்போது வீதியில் பொருத்தப்பட்ட மின்சார வயர்களையும்,ரெலிகொம் வயர்களையும் குறித்த வாகன சாரதி கவனிக்காமல் கனரக வாகனத்தை செலுத்தும்போதே மின்சார,ரெலிகொம் கம்பத்தையும் சேதப்படுத்தியும்,வயர்களையும் சேதப்படுத்தி இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.




Post A Comment:
0 comments so far,add yours