த.தவக்குமார்
கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரகசியமாக உற்பத்திசெய்யப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டிருந்த 70 கசிப்புப் போத்தல்கள் கொக்கட்டிச்சோலைப்பொலிசாரினால் இன்று 1 ஆம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைவாக கொக்கட்டிச்சோலை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி நலிம் அசோக குணவர்த்தன அவர்களின் தலைமையிலான குழுவினர் முதலைக்குடா, முனைக்காடு, வால்கட்டுப்பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத கசிப்புப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் இதனை வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Post A Comment:
0 comments so far,add yours