(க.விஜயரெத்தினம்)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு  இன்று இடைம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலைத்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நிவாரண உதவிகள் அரசாங்கத்துடன் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் வழங்கிவருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கு (ஒரு குடும்பத்துக்கு தலா சுமார் 1300 ருபா பெறுமதியான) பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(1) மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.

தமிழர் முன்னேற்ற கழக அமைப்பினர் அனுசரனையுடன் சில வர்த்தகர்களின் உதவியுடன் இவ் நிவாரண பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.மட்டு மாநகர சபை பிரிவிட்குள் தெரிவு செய்யப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இவ் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அபிவிருத்தி குழு தலைவரு மான எஸ். சந்திரகாந்தன் கலந்துகொண்டு இவ் நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.தமிழர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலக உயர் அதிகாரிகள் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள் இப் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிராமசேவை உத்தியேகஸ்தர்,பொதுமக்கள் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours