புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் மாநகரசபை ஆணையாளரின் செயற்படுத்தலில் புளியந்தீவு வாவிக்கரை வீதி 02 வாவியோரத்தினை சுத்தம் செய்து அழகுபடுத்தும் முகமாக சிரமதானப் பணியானது இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது
மாநகரசபை உறுப்பினர் மற்றும் ஆணையாளரிடம் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மாநகரசபை ஊழியர்களின் பங்களிப்புடன் மேற்படி சிரமதானப் பணி இடம்பெற்றது.
மேற்படி வாவிக்கரை வீதி வாவியோரம் பற்றைக்காடுகளாக இருப்பதையிட்டு அங்கு பல அசௌகரியமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சனசமூக நிலையத்தினூடாக மாநகரசபை உறுப்பினர் மற்றும் ஆணையாளரின் ஆலோசனைகளுக்கமைய சிரமதான நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.







Post A Comment:
0 comments so far,add yours