மட்டக்களப்பு - தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை அடுத்து சம்பவதினமான நேற்று மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் தனிமையிலிருந்த குறித்த நபர் வீட்டின் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours