கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்ட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.
கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிரமங்களில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள், சுயதனிமைப்படுத்தலுக் உட்படுத்தப்பட்டவர்கள், உட்பட எழுமாற்றாகவும் இன்றைய தினம் 86 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 17 பேருக்கு கொரோனா தொற்றுகுள்ளாகியிருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.
;கல்முனைப் பிரதேசத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்;துச் செல்கின்ற நிலையில் பொதுமக்கள் கொரோனா தொற்றை அலட்சியமாகக் கருதாது இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours